Saturday, 7 February 2015

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?


இந்த உலகத்துல பணம் சம்பாரிக்க ஆயிரம் வழி இருக்குங்க. அந்த ஆயிரத்துல ஒன்னு தான் இன்டெர்நெட்ல பணம் சம்பாரிக்கும் முறை.

பொதுவாவே, இப்போ இன்டெர்நெட் பயன்பாடு மக்கள் கிட்ட ரொம்ப அதிகமா ஆகிடிச்சு. இன்டெர்நெட் பற்றிய விழிப்புணர்வு எல்லோர்கிட்டையும் இருக்கு.


நம்ம பொதுவா இன்டெர்நெட்ட எதாவது ஒரு விஷியத்தை பற்றி தெரிஞ்சிக்க, நண்பர்கள் கிட்ட பேச இல்லனா டைம் பாஸ் பண்ண பயன்படுத்துவோம். இதே மாதிரி இன்டெர்நெட்ல பணமும் சம்பாதிக்கலாம். அதற்கான சில வழிகள் தான் நம்ம பாக்க போறோம்.

நீங்க உங்களோட ஓய்வு நேரத்துல கூட இத செய்யலாம். அது என்ன வழிகள் என்று கிழே இருக்கும் வழிகளை பாருங்க.



1. புத்தகம் ;

உங்களுக்கு புத்தகம் எழுதி வெளியிடனும்னு ஆசை இருக்கா. அமேசான் நிறுவனம் இதற்க்கு ஒரு வழி சொல்றாங்க. அமேசான் நிறுவனத்தின் இலவச சேவையான கிண்டில் டைரக்ட் பப்ளிஸிங் ல நீங்க உங்களோட புத்தகத்த வெளியிடலாம். அவங்க உங்களுக்கு புத்தக விற்பனைல இருந்து ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.




2. மொபைல் அப்ளிகேசன் ;

ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு புது அப்ளிகேசன்கல உருவாக்கி நீங்க ஆன்லைன்ல விற்பனை செய்யலாம்.



3. போட்டோ சேல்ஸ் 

www.shutterstock.com, www.shutterpoint.com, www.istockphoto.com இந்த இணையதளங்களுக்கு நீங்க எடுத்த போட்டோவஅனுப்புங்க, உங்களோட போட்டோ சேல்ஸ்ல இருந்து உங்களுக்கு 15% -85% வரைக்கும் ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.



4. பழைய பொருள் விற்பனை;

www.olx.in, www.quickr.com and http://craigslist.co.in இந்த இணையதளங்களில் வீட்ல இருக்க பழைய பொருள்கள விற்பனை செய்யலாம்.



5. ஆன்லைன் ஷாப் ;

www.ebay.in, www.indiebazaar.com இது போன்ற ஆன்லைன் ஷாப்களை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்யலாம்.


6. ஆன்லைன் ஒர்க் ;

www.odesk.com, www.elance.com and www.mturk.com/mturk இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் வேலை செய்து பணம் பெறலாம். இதில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபிப்பதின் மூலம் நிறைய பணம் மற்றும் வாடிக்கையாளர்களை பெறலாம்.


7. கற்பித்தல் ;

நீங்கள் எதாவது ஒரு பாடத்தில் திறமையானவர்களாக இருந்தால் உங்களுக்கு கற்பிக்கும் அனுபவம் இருந்தால், www.2tion.net , www.tutorvista.com இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் பாடம் நடத்தலாம்.



8. ஆன்லைன் விளம்பரம் ;

www.google.com/adsense , www.adbrite.com, இந்த இணையதளத்தில் பதிவு செய்து நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம். உங்கள் விளம்பரத்தை எத்தனை பேர் பார்கின்றனர், விரும்புகின்றனர் என்பதை வைத்து பணம் வரும்.by 
                                                       gothandam

சில மருத்துவக் குறிப்புகள்! நாட்டு வைத்தியம்!

நெஞ்சு சளி;

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து
நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

 தலைவலி;

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம்,
சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்

தொண்டை கரகரப்பு;

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி
செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்;

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால்
தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்;

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு
மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு;

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்
கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

 அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும்
கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்;

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி
சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை;

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை
நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி;

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று
வலி நீங்கும்.

மலச்சிக்கல்;

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர
மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி;

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு;

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த
வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு;

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து
சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி
மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்;

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும்
சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

மூலம்;

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன்
சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்;

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி
வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.


மூக்கடைப்பு;

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்
காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர
மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்;

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.


மார்புச் சளி;

வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு
நீங்கும், மார்புச் சளி அகலும்.

சளிக் காய்ச்சல்;

புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து
சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

இருமல், தொண்டை கரகரப்பு;

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம்,
தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி;

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து
கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

Thursday, 5 February 2015

என் விழி பார்த்து சொல்லிவிடு

பெண்ணே...

உன் இதழ்யோரம்
புன்னகையும் இல்லை...

நான் வைத்த மலர்செடியில்
மொட்டும் விரிக்கவில்லை...

வரம் ஒன்று கேட்டேன்
இறைவனிடம் உன்னை மட்டும்...

நீயோ கொடுத்தாய் என்
கண்ணில் படாதென்று...

அவனிடம் கேட்டது வரம்
நீ கொடுத்தது சாபம்...

வெயிலில் உன்னை
தொடர்வதும்...

நிழலில் மறைவதும் உன்
நிழலென நினைத்தாயா என்னை...

முழுவதும் வெறுத்துவிட்டேன்
உன்னையென...

என் விழி பார்த்து
சொல்லிவிடு...

உன் விழிகளில்
மட்டுமல்ல...

உன் சுவாச காற்று பட்ட
தென்றலை கூட...

நான் சுவாசிக்கமாட்டேன்...

முழுவதும் என்னை
வெறுத்தால் சந்தோசம்...

உன்னில் நான் இல்லைஎன்று
தேற்றிகொள்வேன் என்னை...

துடுப்பு இழந்த படகு
ஆழ்கடலில் தவிப்பது போல...

என்னை தவிக்க விடாதே...

என் விழிபார்த்து
சொல்லிவிடு...

என்னை
பிடிக்கவில்லை என்று.....


மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவனா

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவனா

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவனா நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம். மனிதனின் கண்டுபிடிப்புகளில் தலை சிறந்தது கம்ப்யூட்டர் தான்.

இதில் படம் பார்க்கலாம்! எழுதலாம்! வாசிக்கலாம்! ஏராளமான நூல்களைப் பதிவு செய்யலாம்! பேசலாம்! வரையலாம்! வடிவமைக்கலாம்! உலகை எல்லாம் வலையில் இணைக்கலாம்! இருந்த இடத்திலிருந்து கொண்டே விற்கலாம்! வாங்கலாம்! இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்!

அதன் உறுப்புகளைப் பல வகைகளில் வகைப்படுத்தலாம்!

அதன் ஜீவனாக இருக்கின்ற சிலிக்கானும் இன்ன பிற பாகங்களும் மண் தான் என்பதை மறுக்க முடியுமா?

இப்போது மண் வடிவத்தில் அவை இல்லாவிட்டாலும் மண்ணிலிருந்து அவை தோன்றியதை மறுக்க முடியுமா?

நீங்கள் வாசிக்கின்ற பேப்பர் தனி ஒரு பொருள் என் றாலும், அதுவும் மண் தான் என்பதை மறுக்க முடியுமா? மரக்கூழிலிருந்து இது தயாரிக்கப்பட்டாலும் மரம் மண்ணிலிருந்து உறிஞ்சப்பட்ட சக்தியால் தான் வளர்ந்தது.

எனவே மனிதன் மண் என்று சொல்ல முடியாத கோலத்தைப் பெற்றுள்ளதால் முதல் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதை மறுக்க முடியாது.
இப்போது உலகில் 600 கோடிப் பேர் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தலா 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். 30,000 கோடி கிலோ மொத்த எடையாகிறது.
ஒரு மனிதனும் இல்லாத போது பூமியின் மொத்த எடை எவ்வளவோ அதே அளவு எடை தான் 600 கோடி மக்கள் அதில் வசிக்கும் காலத்திலும் இருக்கிறது.

600 கோடி மக்கள் இப்பூமியில் அதிகமான போதும் 30 ஆயிரம் கோடி கிலோ எடை அதிகமாகவில்லை. 600 கோடி மக்களையும் சேர்த்து பூமியின் எடை எவ்வளவோ அதே எடை தான் ஒரு மனிதனும் படைக்கப்படாத காலத்தில் பூமிக்கு இருந்தது. அதாவது பூமி, தன்னில் 30 ஆயிரம் கோடி கிலோவை மனிதனாக மாற்றியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாம் உண்ணுகிற உணவுகள் மண்ணின் சத்தினால் உருவானதாகும். எனவே நாம் உண்மையில் மண்ணைத் தின்று தான் உடல் வளர்க்கிறோம். இதனால் தான் நம்மால் பூமியின் எடை அதிகரிக்கவில்லை.

ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும் 50 கிலோ எடை பூமிக்கு அதிகமானால் பூமியின் எடை அதிகரித்து வேறு கோள்களுடன் மோதி பூமி சிதறிப் போய் விடும்.
எனவே முதல் மனிதர் மட்டும் அல்ல. நீங்களும், நானும் கூட மண் தான் என்பதை பூமியின் எடை நிரூபிக்கிறது.

நமது முப்பாட்டன்மார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தோண்டிப்பார்த்தால் போதுமே! எதிலிருந்து படைக்கப்பட்டார் களோ அதுவாகவே அவர்கள் மாறியிருப்பதைக் காணலாம்!

ஈரக் களிமண்ணால் படைக்கப்பட்டவன் தான் முதல் மனிதன். அதாவது மண்ணும், தண்ணீரும் கலந்து படைக்கப்பட்டவன். உங்கள் உடம்பில் இவை தாம் உள்ளன. கார்பன் அது'இது' என்றெல்லாம் வகைப்படுத்தினாலும் அதன் முடிவும் மண் தான். நாம் மரணித்த பின் மண்ணாகவும், தண்ணீராகவும் ஆகி விடுவோம்.

முதல் மனிதன் நேரடியாக மண்ணிலிருந்தே படைக்கப் பட்டான் என்பதும் அவனது வழித்தோன்றல்கள் மறைமுக மாக மண்ணிலிருந்து தான் பிறப்பெடுக்கிறார்கள் என்பதும் தான் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதன் பொருள்.

அறிவியல் பூர்வமாக விளக்கம்
---------------------------------------------.

மண்ணால் ஆனவன் மனிதன் என்பதற்கு மனித உடலில் அங்கம் வகிக்கும் மண்ணின் மூலச்சத்துகள் சான்றாக உள்ளன. 70 கிலோ கிராம் எடையுள்ள சராசரி மனித உடலை விஞ்ஞான முறையில் பகுப்பாய்வு செய்த போது, உடலின் மூலப்பொருட்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. மண்ணால் படைக்கப்பட்டவன் மனிதன் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை அறிவியல் உலகம் மெய்ப்பித்தது.

ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலை இங்கே பாருங்கள்

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:
1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று நிரூபிக்கப்படாத ஒரு அனுமானத்தை உலகம் குருட்டுத் தனமாக நம்பிக் கொண்டிருப்பதை

குரங்கிலிருந்து பரினாமம் பெற்று மனிதன் வந்தான் எனில் இத்தனை கோடி ஆண்டுகளாக மனிதன் ஏன் இன்னும் வேறு பரினாமத்திற்கு செல்லவில்லை?

மீதமுள்ள குரங்குகள் ஏன் இன்னும் மனிதனாக பரினாம வளர்ச்சி அடையவில்லை.

சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதா சிந்திப்பீர்!